• Sep 20 2024

சென்னை மக்கள் என்னை எப்போதோ தத்தெடுத்து விட்டனர்- எல்ஜிஎம் இசை வெளியீட்டு விழாவில் ஓபனாக பேசிய டோனி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள திரைப்படம் தான் எல்.ஜி.எம்.இத்திரைப்படம்,  ஒரு யூத்ஃபுல் ரொமாண்டிக் என்டர்டெய் திரைப்படமாக உருவாகி உள்ளது. காதலிக்கும், அம்மாவுக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளைஞராக ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தோனி என்டர்டைன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் ஆகியோர் இணைந்து தங்களது முதல் தமிழ் படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இந்த விழாவில் நடிகை இவனா, நதியா, ஹரீஷ் கல்யாண்,யோகி பாபு, சாண்டி மாஸ்டர், பாடகர் ஆண்டனி தாஸ் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் 'Kiliki' பாடலுக்கு நடனமாடினார். அதேபோல பாடகர் ஆண்டனி தாஸ் காட்டுபயபுள்ள பாடலை அட்டகாசமாக பாடினார்.


இது தவிர டோனியும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அவர் பேசும் போது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் தான் விளையாடினேன். டெஸ்டில் அதிக ரன்களும் சென்னையில் தான் அடித்தேன். இப்போது எனது முதல் படமும் தமிழில் அமைந்துள்ளது. சென்னை மக்கள் என்னை எப்போதோ தத்தெடுத்து விட்டனர் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement