• Nov 17 2024

வாரிசு துணிவு படங்களின் ரிலீஸ் நாளில் தமிழக மக்கள் செலவு செய்த பணம் இத்தனை கோடியா?- அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

துணிவு - வாரிசு படம் ரிலீசாகி உள்ளதால் கடந்த இரு தினங்களாகவே தமிழ் சினிமா பரபரப்பாக இயங்கி வருகிறது. இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் துணிவு படத்துக்கு 1 மணி காட்சியும், வாரிசு படத்துக்கு 4 மணி காட்சியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 அப்படி இருந்தும் இருதரப்பு ரசிகர்களும் நேற்று சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்இதனிடையே வாரிசு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும்,  துணிவு திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும் நம்மிடையே நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 


அதன்படி துணிவு படத்திற்கும் வாரிசு படத்திற்கும் இடையேயான முதல் நாள் வசூல் வேறுபாடு சுமார் 40 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் தெரிகின்றன.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டு மக்கள், விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள் ரிலீஸ் ஆன, இந்த 2023 ஜனவரி 11-ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சுமார் 55 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதாவது இரண்டு படங்களும் இணைந்து சுமார் 40 கோடி ரூபாய் (டிக்கெட் கட்டணம்) கலெக்ட் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள் கிடைக்கின்றன. இவை தவிர உணவு மற்றும் பானங்கள், பார்க்கிங் கட்டணங்கள், போக்குவரத்து கட்டணங்கள் என அனைத்தையும் சேர்த்தால் சுமார் 55 கோடி ரூபாய்  தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலவழித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


Advertisement

Advertisement