விஜய் எந்தளவிற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றாரோ அதே அளவிற்கு தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நடிகர் விஜய் தலைமையில் தான் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமட்டுமல்லாது சமீபகாலமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இவர் மேற்கொண்டு வருகின்ற சந்திப்புக்களும் அரசியல் குறித்த எண்ணமாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தூத்துக்குடி இனிகோநகரை சேர்ந்தவர் சுறா பாஸ்கர் என்ற மீனவர் இனிகோநகர் பகுதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக உள்ளார். இவரின் வீடும் இவரது அண்ணன் வீடும் அடுத்தடுத்து அருகில் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் பீட்டர், பாஸ்கர் ஆகிய இருவரது வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.
இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் சந்தம் கேட்டு எழுந்து வந்து பார்க்கும் போது வாசல் அருகே இருந்த மீன் பிடிக்கும் வலைகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீஸார் விரைந்து சென்றனர்.
பின்னர் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டை வீசியது யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து தீவிர விசாரணைகளை நடத்தினர். இவர்களுடன் இணைந்து தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இந்த விசாரணையில் பெட்ரோல் குண்டுகளை வீசியது அதே பகுதியைச் சேர்ந்த ஜெரிஸ், நரேஸ், ஜெய்சன் என்ற வாலிபர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 வாலிபர்களையும் கைது செய்த போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Listen News!