தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருவர் நடிகர் மகேஷ்பாபு ஆவார். தென்னிந்திய சினிமா ரசிகர்களால் இவர் அதிகம் கொண்டாடப்படுகிறார். அதுமட்டுமல்லாது அதிக சம்பளம் பெறும் நடிகராக இவர் திகழ்கின்றார். மகேஷ் பாபு தனது கொள்ளை கொள்ளும் அழகு மற்றும் தனது தனித் திறமையான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
அதுமட்டுமல்லாது பொதுவாகவே இவரது திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக கருதப்படுகிறது இன்று வரை ஒரு கதாநாயகனாகவே திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் தற்போது இவர் இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் SSMB28 திரைப்படத்தில் நடித்து வருகின்றார் பிஸியான ஷூட்டிங் அட்டவணைக்கு இடையில் அவ்வப்போது மகேஷின் குடும்பத்தினர் அவரது சினிமா குறித்த தகவல்களை பகிர்ந்து வருவர்.
தற்போது இவர் ஆலிம் காகிம் என்ற பிரபல ஹேர்ஸ்டைல் நிபுணரிடம் தனது தலை முடியின் வடிவத்தை மாற்றி புதிய தோற்றத்தில் நடிகர் மகேஷ்பாபு காட்சியளிக்கும் புகைப்படத்தை அவரது மனைவி நம்ரதா பகிர்ந்து கொண்டதுடன் புகைப்படத்துக்கு ஏற்றாற்போல் too cool எனவும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு ரசிகர் குறித்த ஹேர் ஸ்டைல் ஆனது பெண்களை கவரும் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
Listen News!