• Sep 20 2024

ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சியின் உச்சம் தொட்ட கிரண்-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். அந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியினை தேடிக் கொடுத்தமையினால் அடுத்ததாக தல அஜித்துடன் ‘வில்லன்’ என்ற படத்தின் மூலம் இணைந்தார். அந்தப் படமும் பெரியளவில் ஹிட்டாக அதனைத் தொடர்ந்து ‘வின்னர்’ படத்தில் பிரசாந்திற்கு ஜோடியானார். வின்னர் படமும் மெகா ஹிட்டானது.

இதனால் உலகநாயகனுடன் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர்ந்து ‘அன்பே சிவம்’ என்ற படத்தில் நடித்தார். இவ்வாறு அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தமையினால் கோலிவுட்டில் கிரண் பெரிய ரவுண்ட் வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு பிறகு வந்த படங்கள் யாவும் தோல்வியை சந்திக்க சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனார் கிரண். அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடலுக்கு நடனமாடி வந்தார். மேலும் ‘ஆம்பள, முத்தின கத்திரிக்கா, சகுனி’ போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் கொஞ்சமும் அசராத கிரண் சமூக வலைத்தளப் பக்கமாக தனது கவனத்தை திசை திரும்பியுள்ளார். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருப்பார். மேலும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பகிர்வதும் அதனை ரசிகர்கள் அதிகம் லைக்ஸ், கமெண்ட் செய்வதும் வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் புடைவை அணிந்து கொண்டு அதற்கு ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement