தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். இவர் முதலில் சின்னத்திரையில் இருந்தே பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார். அந்தவகையில் 'மேயாத மான்' என்ற படத்தின் மூலமே கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார். இந்த படமானது வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது முதலுக்கு மோசம் இல்லாமல் வசூலையும் வாரிக்குவித்திருந்தது.
இந்நிலையில் படங்களில் மட்டுமன்றி வெப் தொடர்களையும் விட்டு வைக்காத இவர் 'டைம் என்ன பாஸ்' உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு திரையில் இவரின் ஆரம்பம் சீரியலில் இருந்து தான் தொடங்கியது. அந்தவகையில் 'கல்யாண முதல் காதல் வரை' என்னும் சீரியல் மூலமே முதலில் தோன்றி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் டீவியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, தென்னிந்திய ஃபிலிம் பெயர் விருது, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 1' போன்ற ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கின்றார்.
இவர் தன்னுடைய அறிமுகப் படத்தைத் தொடர்ந்து பின்னர் 'கடைக்குட்டி சிங்கம், கசடதபற' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக 'மாபியா அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், தங்கும் விடுதி' உள்ளிட்டவற்றிலும் தோன்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாது சமீபத்தில் அருண் விஜய் மற்றும் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் எஸ் ஜே சூர்யா உடன் 'பொம்மை', ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'அகிலன்', லாரன்ஸின் 'ருத்ரன்', சிம்புவின் 'பத்து தல', உலக நாயகனின் 'இந்தியன் 2' உள்ளிட்ட பல படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கின்றார்.
இந்நிலையில் இவர் தற்போது தன் காதலருடன் பிரான்ஸ் ட்ரிப் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த ப்ரியாபவானி கிட்டத்தட்ட ஒரு மாதமாக வெளிநாட்டிலேயே செட்டிலாகிவிட்டார். அந்த அளவிற்கு அவர் பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து என்று செம ஜாலியாக இருந்து வருகிறார்.
எங்கு சென்றாலும் அதனை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்ற ப்ரியா தற்போதும் அருவிக்கு அருகில் நின்று போஸ் கொடுத்து அதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
Listen News!