தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் ஒரு பஸ் கண்டக்டராக இருந்து, பின்னர் முறையாக நடிப்பு குறித்து பயின்று நடிகராக மாறியவர்.
இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் என்றாலும், இவருடைய பூர்வீகம் என்னவோ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி என்கிற இடம் தான். ஒரு சாதாரண பேருந்து நடத்துநராக தன் வாழ்க்கையைத் தொடங்கியா இவர் இன்று உலகமே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார்.
ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரையில் இவர் எப்போதுமே தன்னுடைய பழைய நினைவுகளை மறக்க மாட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இன்றைய தினம் இவர் தான் பஸ் நடத்துநராகப் பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அங்கிருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Just IN: #Rajinikanth made a surprise visit today to Bengaluru, Jayanagar Bus🚌🚏 Depot where he started his career as conductor.
SELF made superstar for a reason!
||#Jailer | #600CrJailer|| pic.twitter.com/iYNXDWZmDD
Listen News!