பிக்பாஸ் சீசன் 3இன் உடைய முக்கியமான போட்டியாளர்களில் ஒருவரான கவின் தற்போது ஹீரோவாக 'டாடா' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் பிக்பாஸுக்கு பிறகு கவின் நடிப்பில் வந்த 'லிப்ட்' என்ற படமானது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. ஆனாலும் அந்தப் படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக நடித்து இருக்கும் டாடா படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகி உள்ள இத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன், டாடா படத்தின் கதை அட்டக்காப்பி எனக் கூறி விமர்சித்துள்ளார். அதாவது நடிகர் கமல்ஹாசன் அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' என்ற திரைப்படத்தின் கதை தான் 'டாடா' படத்தின் கதை என்றும் அதை இயக்குநர் கணேஷ் அப்படியே காப்பி அடித்து திரைக்கதை எழுதி இருக்கிறார் என்றும் பலவாறு விமர்சனம் செய்து கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
மேலும் களத்தூர் கண்ணம்மா படத்தின் கதையையும் டாடா திரைப்படத்தின் கதையையும் ஒப்பிட்டுக் கூறியும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாது டாடா படத்தை பார்க்கும் பொழுது தொலைக்காட்சி சீரியல்தான் ஞாபகம் வருகிறது என்றும் கிண்டலாக விமர்சித்து கூறியிருக்கிறார்.
எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும், எத்தனை கோடிகளை கொட்டி படம் எடுத்தாலும் தனது விமர்சனத்தால் அவற்றை தூள் தூளாக்கி நாறடித்து வரும் ப்ளூ சட்டை மாறன் கவினை மட்டும் விட்டு வைப்பாரா..? கவினின் 'டாடா' படம் குறித்த ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனம் ஆனது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!