• Nov 14 2024

தற்கொலை செய்த நடிகை தீபாவின் போனை தீவிரமாக தேடி வரும் போலீசார்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 தற்கொலை செய்து கொண்ட நடிகை தீபாவின் ஐபோன் காணமல் போனதால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் சத்தியவேடை பூர்விகமாக கொண்ட 29 வயது நடிகை பவுலின் ஜெசிகா .இவர் டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட் வீடியோஸ் போன்றவற்றால்  மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'வாய்தா' என்ற படத்தில் நடித்திருந்த விடயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


மேலும்  இந்தப் படத்திற்கு முன்னதாக அவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த தீபா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவென்யூவில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.


இவ்வாறுஇருக்கையில்  சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலுள்ள தனது வீட்டில் நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தீபாவின் செல்போனுக்கு அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவர் ஜன்னலில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர்.


இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் தீபாவின் உடலை கைப்பற்றி அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து  தீவிர விசாரனை நடத்தி வருகிறார்கள்.தீபாவின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றிள்ளனர் போலீசார். அதில் தான் உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அந்த காதல் கை கூடவில்லை என்பதால் இந்த உலகத்தை விட்டு பிரிவதாக தெரிவித்துள்ளார் தீபா.


எனினும் இதையடுத்து தீபாவை காதலித்து வந்த உதவி இயக்குநர் சிராஜுதீன் என்பவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நடிகை தீபா பயன்படுத்தி வந்த போனை காணவில்லை என்றும் அதனை சிராஜுதீனின் நண்பர் அதை எடுத்து சென்றுவிட்டதாகவும் தீபாவின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து தீபாவின் போனை தீவிரமாக தேடி வருகின்றனர் போலீசார்.





Advertisement

Advertisement