• Sep 20 2024

பிரபு கொலையில் சிக்கிய ஆதாரம்... போலீசிற்கு தெரியவந்த உண்மை... கயல் சொன்ன வார்த்தையால் சந்தோஷத்தில் எழில்... வெளியானது 'Kayal' Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலானது தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு அமைந்துள்ளது, அதாவது கடின உழைப்பாளியான கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் எவ்வாறு சிக்கலில் இருந்து காப்பாற்றி வருகிறார் என்பதை அழகாக எடுத்துக் காட்டுகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் போலீசார் ஒரு செயினைக் காட்டி இது யாரோட செயின் எனக் கேட்கின்றனர். பின்னர் அது கயலின் தங்கை ஆனந்தியின் செயின் எனக் கண்டுபிடிக்கின்றனர்.


மறுபுறம் கயல் எழிலிடம் "உயிருக்குயிராக இல்லை, அதையும் தாண்டி நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்" எனக் கூறுகின்றார். இதனையடுத்து எழில் சந்தோஷத்தில் கை, கால் புரியாமல் நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து என்ன நடக்கபோகுது என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement