90களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணியில் விளங்கியபவர் நடிகை சுகன்யா.இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்..
இவ்வாறு இருக்கையில் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை சுகன்யா திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகளை இருக்கின்றது. பின் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.
விவாகரத்து பெறும் அளவுக்கு நடிகை சுகன்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என பலரும் யூகித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்துப் பெண்களுக்கு அறிவுரைகளை வழங்கி இருக்கின்றார்.
அதாவது "எந்த ஒரு விடயத்திற்கும் பெண்கள் பயந்து ஓடத் தேவையில்லை. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கலந்து பேசி நீதிமன்றம் சென்று முறைப்படி விவாகரத்துப் பெறலாம். விவாகரத்து பெறுவதில் உங்களுக்கு ஏதாவது தயக்கம் இருந்தால் பின்னர் நீங்கள் உங்கள் வாழ்வில் கொடுமையான விடயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். விவாகரத்துப் பெறுவதற்காக பெண்கள் யாரும் பயப்பிட வேணாம்" எனக் கூறியிருக்கின்றார்.
மேலும் சுகன்யாகூறுகையில், தான் ஒரு முன்னாள் அமைச்சரின் கட்டுப்பாட்டில் ரொம்ப நாட்கள் இருந்ததாகவும், இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க சுகன்யாவுக்கு பெரும் ஆசை இருந்தாலும் அவரால் அந்த அரசியல்வாதியை மீறி எதுவும் செய்ய முடியவில்லை" எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது "அரசியல்வாதியால்தான் தன்னுடைய பாதி வாழ்க்கை நாசமாகிவிட்டது" எனவும் கூறியிருக்கின்றார்.
Listen News!