தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் தற்போது உருவாகும் படம் 'லால் சலாம்'. இப்படத்திற்கு இன்று சென்னையில் பிரமாண்டமாக பூஜை போடப்பட்டது. அதில் லைகா நிறுவன தலைவர் ஆகிய சுபாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
லைகா நிறுவனத்தின் உடைய தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஐஸ்வர்யா இதற்கு முன்னர் '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கி பாராட்டுக்களையும் பெற்று உள்ளார்.
கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பிரமாதமாக இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்தோடு லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் லால் சலாம் படத்தின் மூலம் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இதில் அவர் நடிக்கும் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
Listen News!