• Sep 21 2024

காதாம்பரியின் கழுத்தில் கத்தி வைத்த சக்தி- ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மௌனராகம் புரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மௌனராகம். இந்த சீரியல் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அதாவது சத்யா தன்னுடைய அப்பா கார்த்திக் கிருஷ்ணா தான் என்ற உண்மையை எல்லோரிடமும் வெளிப்படையாகக் கூறி விட்டார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது வெளியாகிய புரோமோவில் உண்மையை அறிந்த காதாம்பரி மல்லிகாவை தேடிச் சென்று கழுத்தை நெரிக்கின்றார். அம்மாவை விடுமாறு சக்தி கெஞ்சி கேட்டும் காதாம்பரி விடுவதாக இல்லை. இதனால் கோபமான சக்தி கத்தியை எடுத்து காதாம்பரியின் கழுத்தில் வைக்கிறார். இந்த புரோமோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement