இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி டிஸ்னி ப்ளஸ் ஹொஸ்டாரில் வெளியாகிய திரைப்படம் தான் மாறன். இந்தத் திரைப்படம் வெளியாகிய நாளிலிருந்து மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
அத்தோடு இப்படப்பிடிப்பின் போதே தனுஷிற்கும் கார்த்திக் நரேனுக்கும் இடையில் மோதல் எழுந்ததாகவும், அதனால் கார்த்திக் நரேன் கோபித்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்தை விட்டே வெளியே சென்றுவிட்டதாகவும், தனுஷே பல காட்சிகளை இயக்கியதாகவும் செய்திகள் வெளியாகின.
அதன் பின்னர் ஒருவழியாக படம் முடிந்து ரிலீஸானது. ஆனால் படத்துக்காக எந்த ப்ரமோஷனிலும் தனுஷும் இயக்குநரும் சேர்ந்து கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் மாறன் படத்தின் தோல்வியால் கார்த்திக் நரேன் தற்போது அதர்வா, சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோரை வைத்து இயக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாம். இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
Listen News!