• Sep 20 2024

தளபதி 68 படத்துக்கு வந்த சிக்கல்...வெங்கட் பிரபு எடுக்கப்போகும் முடிவு இதுதானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இது ஒரு Gangster படம் என சொல்லப்படுகிறது…

இப்படத்தின் கதை டிஸ்கஷன் தற்போது நடைபெற்று வருகிறது. சில தகவல்கள் இந்த டிஸ்கஷனில் இருந்து வெளியே வந்த காரணத்தால் தன்னுடைய துணை இயக்குனர்களை திட்டித்தீர்த்துள்ளார் வெங்கட் பிரபு.

இதன்பின் ஹோட்டல் ரூம் கதவை கூட திறக்காமல் முழுமூச்சாமாக தளபதி 68 படத்தின் கதை அமைப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

இப்படியொரு நிலையில், விஜய்யிடம் கூறிய ஒன் லைன் முழு திரைக்கதையாக உருவாக்க வெங்கட் பிரபு மற்றும் அவருடைய துணை இயக்குனர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறதாம். என்ன செய்வது என அவர்கள் குழம்பி போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது…எப்படி இதனை எடுப்பது என பேசி வருகின்றனராம்..

அப்படி ஒருவேளை இந்த கதையின் திரைக்கதை சரியாக வரவில்லை என்றால், வெளியே இருந்து புதிய கதையை வாங்கி விஜய்யை வைத்து படமெடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதுவாக இருந்தாலும், கண்டிப்பாக விஜய்யை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபு கண்டிப்பாக விட்டுக்கொடுக்கவே மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது…இது விக்னேஷ் சிவனை பார்த்து எடுத்த முடிவு என சொல்லப்பட்டு வருகிறது..

Advertisement

Advertisement