விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். தில் ராஜு இப்படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரிக்க தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அத்தோடு ராஷ்மிகா இப்படத்தில் நாயகியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் திரையில் வெளியாவதால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருக்கின்றனர்.
அத்தோடு இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது.எனினும் இதைத்தொடர்ந்து சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது
இதில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் ஹைலைட்டான விஷயமாக அமைந்தது. இவ்வாறுஇருக்கையில் சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் படத்தை காண ஆவலாக இருக்க தற்போது அவர்களை அதிர்ச்சியாக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வாரிசு படத்தின் பிண்ணனி இசை வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில் அயல்நாடுகளில் வாரிசு படம் தணிக்கை செய்வதில் தாமதம் ஏற்படுகிறதாம்.
இதன் காரணமாக அயல்நாடுகளில் வாரிசு திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகின்றது. அத்தோடு பொதுவாக விஜய் படங்கள் மற்ற நாடுகளிலும் வசூலில் சாதனை படைக்கும். அவ்வாறு இருக்கையில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் அது வசூலை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். இதன் காரணமாக தமனின் மீது விஜய் அப்சட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
Listen News!