• Nov 14 2024

அம்மா வயது நடிகையை அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்கள்.. நடிகை செய்த அதிரடி செயல்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மகன் வயது தயாரிப்பாளர்கள் 3 பேர் தன்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யுமாறு கூறியதாக பிரபல நடிகை கூறியிருக்கும் விடயம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சார்மிளா. 1979 ஆம் ஆண்டு வெளியான நல்லதொரு குடும்பம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சார்மிளா.இதனைத்  தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.


அதிகம் மலையாள படங்களில் நடித்துள்ளார் சார்மிளா. தற்போது 48 வயதில் உள்ள சார்மிளா ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்து வருகின்றார். மேலும் அந்த வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்திருந்தார் சார்மிளா.


எனினும் தற்போது தமிழ் மலையாளம் என 5 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை சார்மிளா, தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை குறித்து கூறியுள்ளார். அதாவது சார்மிளா ஒரு படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருந்தாராம். மேலும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக 24, 25 வயதுகளில் 3 இளைஞர்கள் இருந்துள்ளனர்.

முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மூன்றாவது நாள் அந்த 3 பேரில் ஒருவர் சார்மிளாவிடம் வந்து எங்களில் ஒருவரை நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சார்மிளா, இன்னும் கொஞ்ச நாளில் என் மகனுக்கே உங்கள் வயது வந்துவிடும். நீங்கள் என்னை அம்மாவாகதான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.


என்னிடம் இப்படி பேசுவது சரியில்லை என மறுத்துள்ளார். ஆனால் அதனை ஏற்காத அந்த இளைஞர்கள் சார்மிளாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.மேலும்  ஒரு கட்டத்திற்கு பிறகு இதனை பொறுக்க முடியாத சார்மிளா அந்த படத்தில் இருந்தே விலகியுள்ளார். நடிகை சார்மிளா கூறியுள்ள இந்த தகவல்  பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement