விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றே பிக்பாஸ். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 6இல் தற்போது அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன்,ரச்சிதா உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சியானது நிறைவடைய இன்னும் குறுகிய காலமே இருப்பதால் இனிவரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்த வார டாஸ்க்கான Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
அதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் "சண்டை கிண்டை என்ன போட்டாலும் ஒரு ரூல் வச்சுக்கோங்க" எனக் கூறுகின்றார். மேலும் "எவ்ளோ சண்டை போட்டாலும் வீட்டில் ஒண்ணாக உட்கார்ந்து சாப்பிடுங்க" எனவும் கூறி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மணிகண்டனின் குடும்பத்தோடு இணைந்து ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!