தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார் திவ்யதர்ஷினி. இவர் படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக திரைக்கு அறிமுகமானர்.
தொடர்ந்து விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 நிகழ்ச்சிகளில் பணியாற்றி உள்ளார்.
ஆனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்று தந்த நிகழ்ச்சி என்றால் அது காபி வித் டிடி தான். தொடர்ந்து படங்களுக்கு குரலும் கொடுத்து வருகின்றார்.
மேலும் சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி, விருது விழா, ஆடியோ வெளியீட்டு விழா என எந்த மேடையாக இருந்தாலும் சூப்பராக நிகழ்ச்சியை கொண்டு செல்வார், கூடவே ஜாலியாகவும் எடுத்து செல்வார்.
டிடி இதுவரை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிக்காகவும், வெளியேவும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு மட்டும் 2021 வரை ரூ. 3ல் இருந்து ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
Listen News!