நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் லால் சலாம் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தில் தெலுங்கு பிரபல நடிகரின் மனைவியும் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இவர் ஆரம்பத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றும் 25 ஆண்டுகளுக்கு பின்னர் திரும்பவும் சினிமாவிற்குள் வருவதாகவும், இவர் முன்பு ஒரு சிறந்த நடிகையாக இருந்திருக்கிறார். தனது திருமண வாழ்விற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றும் தெரியவருகிறது.
லால் சலாம் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையுடன் வர உள்ளது. இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது என்றும் தகவல் கசிந்துள்ளது.
இந்த படத்தில் பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மனைவியும் நடிகையுமான ஜீவிதா இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ’வளைகாப்பு’ என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே ரஜினியுடன் ஜீவிதா படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஜீவிதா ரஜினியின் தங்கை கேரக்டரில் நடிப்பதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் கதைக்கு திருப்பமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
Listen News!