• Sep 20 2024

சிபி சத்யராஜ் நடிக்கும் வட்டம் பட ரிலீஸ் தேதி வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமலகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட்டம்’. இந்த படத்தில் கதாநாயகனாக சிபிராஜும், முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர்.முதல்முறையாக சிபியும், ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்தில் சிபிக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தைட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. அத்தோடு இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவுபெற்று ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 29-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி மனோவாக நடிக்கும் சிபி மற்றும் பார்வதியாக நடிக்கும் ஆண்ட்ரியா போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement