தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் அதர்வா. இவர் நடிப்பில் தற்பொழுது குருதி ஆட்டம் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்றை பெற்றது.இப்படத்தினை இயக்குநர் ஸ்ரீகணேஷ்,இயக்கியுள்ளார்.யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டாலும், பல்வேறு சிக்கலால் படத்தின் பணிகள் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது.
த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் அதர்வா ஒரு விபத்தில் சிக்குகிறார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகளை ஏற்பட்டு அவரது வாழ்க்கையே மாறிவிடுகிறது. இந்த பிரச்சனைகளை அதர்வா எவ்வாறு எதிர்கொண்டார் என்பதையை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது.
இந்நிலையில் 'குருதி ஆட்டம்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 5ந் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதர்வா நடித்த 100 திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகததால் இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரஜினியே இப்படி சொல்லி விட்டார் அப்பிறம் சொல்லவா வேணும்-கடும் ஆர்வத்தில் ரசிகர்கள்
- விஜய்க்கு ஏதாவது சின்ன ரோல் கொடுங்க என அவரது அப்பா என்னிடமே கேட்டிருக்கிறார்- பளிச் என்று கூறிய பார்த்திபன்
- எங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி- அஜித்தை மிஞ்சிய அமீர்கான்
- நயன்தாராவின் 75 படத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?-மாஸ்டர் பிளான் தான் போட்டிருக்கிறாங்க
- விஜய்தேவர்கொண்டாவுடன் டேட்டிங் செய்ய எனக்கு ஓகே-காதல் வலையில் சிக்கிய பிரபல நடிகை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!