தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சமந்தா. படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்த சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக சமானதா படங்களில் நடிக்காமல் தொடர்ந்து வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்து வந்தார். இருப்பினும் அவர் நடித்த யசோதா என்கிற திரைப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியானது. அந்த சமயத்தில் கூட சமந்தா உடல் நிலை சரியில்லாமல் தான் இருந்தார். அப்படியான ஒரு சூழ்நிலையிலும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தித்து வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து படிப்படியாக உடல்நலம் தேறி வந்த சமந்தா கடந்த மாதம் முதல் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள தொடங்கி உள்ளார் சமந்தா. அதுமட்டுமல்லாது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்ற படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு அந்த நிகழ்வில் கண்கலங்கியபடி பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சாகுந்தலம் படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கெனவே அறிவிப்புக்கள் வெளியாகி இருந்தன. ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி சிறிது காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது 'சாகுந்தலம்' படத்தினுடைய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அந்தவகையில் ஏப்ரல் 14-ஆம் திகதி இப்படம் வெளியாக இருக்கின்றது. இவ்வாறு தமிழ் சிங்கள தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இப்படம் வெளியாக இருப்பதால் சமந்தா ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Listen News!