தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்து வரும் ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் முக்கிய நடிகராக இருப்பவர் தான் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
மேலும் இவர் தற்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையையும் குறைத்து உள்ளார்.
இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலம் தமிழில் சித்தி இத்னானி கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இவருடன் இப்படத்தில் மற்றொரு நடிகை ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி இப்படமான செப்டெம்பர் மாதம் 15ம் திகதி வெளியாகும் என்று உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதைக் காணலாம்.
பிற செய்திகள்
- நாடக கலைஞர் போல வேடமிட்டு மிரட்டியிருக்கும் இயக்குநர் செல்வநாயகன்-பகாசூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
- நடிகை ஸ்ரேயாவின் மகள் ராதாவா இது?- அட அதுக்குள்ள இப்படி வளர்ந்திட்டாரே
- விஜய் செட்டில் அமைதியாகவே இருப்பார்- இப்போ அவரைப் பார்க்க பிரமாண்டாக இருக்கு- பிரபல நடிகை சங்கீதாவின் பேட்ட
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!