• Sep 21 2024

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிச்சாச்சு- சூப்பர் அப்டேட் இது தான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் cருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் கதாநாயகியாக கே ஜி எப் புகழ் நடிகை ஸ்ரீ நிதி நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இப்படமானது சுதந்திர தின விடுமுறை தினத்தில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதன் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதன் காரணமாகத்தான் சுதந்திரதின விடுமுறையில் கார்த்தியின் விருமன் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளார்.அதன்படி கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார் என்பதும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement