• Sep 20 2024

மீண்டும் திரைக்கு வரும் கமலின் ‛பேசும் படம்' வெளியானது அறிவிப்பு

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்தகட்டமாக  ஆளவந்தான் படமும் விரைவில் ரீ- ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடித்த பேசும் படம் என்ற படமும் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. தெலுங்கில் புஷ்பக் என்ற பெயரில் எடுக்கப்பட்டு தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வெளியாகியிருந்தது.

இப்படம் குறத்த  தகவலை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாக இருக்கின்றது. இந்த படம் 1987ம் ஆண்டு 35 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதோடு, வசனமே இல்லாமல் வெளியான படம் ஆகும்.



Advertisement

Advertisement