• Nov 19 2024

எங்கள் சோழ தேசத்து வேங்கையின் கர்ஜனை- தெலுங்கு மற்றும் தமிழில் டப்பிங் பேசி அசத்தும் விக்ரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் செப்டம்பர் 30 ம் தேதி 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது.இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

அந்த வகையில் இந்தப்படத்தில்ஆ தித்ய கரிகாலன் ரோலில் விக்ரம், வந்தியத்தேவன் ரோலில் கார்த்தி,நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய், குந்தவை ரோலில் த்ரிஷா, அருள்மொழி வர்மன் ரோலில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் ஜுலை கடந்த 8ம் திகதி வெளியாகி இதுவரை 30 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விக்ரம் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பொன்னியின் செல்வன் டீசர் விழாவில், ஆதித்ய கரிகால சோழனை ரசிகர்கள் மிஸ் செய்ததால் நாளை மாலை 5 மணிக்கு விக்ரம் ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக பொன்னியின் செல்வன் டீம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று, எங்கள் சோழ தேசத்து வேங்கையின் கர்ஜனை…5 மொழிகளில் என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக 5 மொழிகளில் விக்ரம் டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒரு வரி தமிழில், அடுத்த வரி தெலுங்கில் என விக்ரமின் டப்பிங் வீடியோ, புலியை போல் உருமுவது ஆகியன ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.ஏற்கனவே வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் டீசரின் இறுதியில், விக்ரம் பேசும் ஒரே ஒரு டயலாக் மட்டும் இடம்பெற்றிருக்கும். இந்த கல், ரத்தம், போர், பகை எல்லாமே அதை மறக்கத்தான். அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான் என பேசி கத்துவார். இந்த டயலாக் டப்பிங் பேசும் வீடியோ தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement