• Sep 20 2024

கோதை குடும்பத்திற்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி- அர்ஜுனைத் திட்டிய கோதை- காதலை சொல்ல முடிவெடுத்த நமச்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோதை அசோசியேசனுக்காக புது பில்டிங் கட்டித் தருகிறேன் என்று வாக்குக் கொடுக்க தமிழ் இது பொதுவான கட்டடம் அப்படி எல்லாம் கட்டிக் கொடுக்க முடியாது எல்லோரும் காசு போட்டுக் கட்டினால் அவங்க தருகின்ற பணத்தை விட அதிகமாகவே பணம் கிடைக்கும் என் சொல்ல தமிழின் ஐடியாவை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.


இதனால் கடுப்பாகி கோதை அங்கிருந்து கிளம்பி விட சரஸ்வதி அத்தை சோகத்தில் போய்ட்டாங்களே என்று கவலைப்பட அந்த நேரம் அர்ஜுன் வர நமச்சி அர்ஜுனைக் கடுப்பேத்துகின்றார். அர்ஜுனும் தமிழ் இந்த தொழிலையே விட்டிட்டு ஓடப் போறது தான் உறுதி என்று சொல்ல தமிழ் அர்ஜுனை வெறுப்பேத்தி அனுப்புகின்றார்.

தொடர்ந்து நமச்சி கோதை வீட்டில் வேலை செய்யும் அபியை சந்தித்து பேச அவர் வீட்டில் கோதை சோகமாக இருப்பதைச் சொல்லுகின்றார். அத்தோடு தனக்கு கல்யாணம் நின்று போன விஷயத்தையும் சொல்ல நமச்சி சந்தோஷப்பட்டு உனக்கு ஒரு விஷயம் சொல்லனும் ஜெயிச்சதுக்கு அப்பிறம் சொல்லுறேன் என்று சொல்லி விடடுக் கிளம்புகின்றார்.

தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரஸ்வதி தமிழிடம் நீங்க தான் ஜெயிப்பீங்க என்று நம்பிக்கை கொடுக்க அந்த நேரம் நமச்சி வந்து கோதை வீட்டில் நடந்த விஷயத்தையும் அபிக்கு கல்யாணம் நின்ற போன விஷயத்தையும் சொல்ல சரஸ்வதி அபிக்கிட்ட உங்க லவ்வை சொல்ல வேண்டியது தானே என்று கேட்கின்றார்.


பின்னர் கோதை சாப்பிடாமல் இருக்க நடேசன் சாப்பிட கூட்டிக் கொண்டு போகின்றார். கோதை சாப்பிட உட்கார அர்ஜுன் வந்த ஒரு ஐடியா சொல்ல கோதை திட்டுகின்றார். பணம் கொடுத்து விலைக்கு வாங்க சொல்லுறீங்களா அப்படி எல்லாம் யாரையும் ஏமாற்ற கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்க கார்த்தி வந்து புது ஐடியா சொல்ல கார்த்தியின் ஐடியா பிடித்துப் போக அந்த கம்பனியிடம் பேச கார்த்திக்குடன் கோதை போகின்றார்.

அர்ஜுன் கார்த்திக் நல்ல பெயர் எடுத்திடுவான் போல இருக்கே என மனதுக்குள்ளே சொல்ல நடேசன் கார்த்திக்கை நக்கலடிக்க கார்த்திக் அங்கிருந்து கிளம்புகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement