வாரிசு நடிகை ஒருவர் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிவிட்டதாம். அதை நினைத்து அம்மணி கவலையில் இருக்கிறாராம்.
கோலிவுட்டிக்கு வந்ததில் இருந்து இன்றளவும் வெற்றிகரமான நபராக இருப்பவரின் மகள் அந்த நடிகை. அவர் நல்லா படித்த பெண் தன் படிப்புக்கு ஏற்ற வேலையை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்பா நான் நடிகையாகப் போகிறேன் என ஒரு நாள் குண்டை தூக்கிப் போட்டார் மகள். அவர் உறுதியாக இருப்பதை புரிந்து கொண்ட அப்பாவும் சரி, உன் இஷ்டம் என சொல்லிவிட்டார்.
மகளை யார் படத்தில் அறிமுகம் செய்து வைக்கலாம் என அப்பா யோசிக்கும்போது தான் தம்பி நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது.மேலும் அந்த நடிகர் வேண்டாம்பா என்றாராம் மகள். ஏன் வேணாம், நல்ல மனுஷன், எந்த கிசுகிசுவும் இல்லை. தைரியமாக நடிக்கலாம், போ என மகளை நடிக்க வைத்தார் அப்பா. இப் படம் ரிலீஸானபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
முதல் படம் சரியாக போகாத நிலையிலும் அந்த நடிகைக்கு அடுத்ததாக பெரிய நடிகர் ஒருவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு மனைவியை தவிர வேறு யாரையும் பார்க்க மாட்டார் என்பதால் அந்த நடிகருடன் தன் மகள் நடிக்க அப்பாவும் சம்மதம் தெரிவித்தார். அப்பாவின் ஆசியுடன் அந்த படத்தில் நடித்து வருகிறார் மகள்.
மாப்பிள்ளை பார்ப்பது போன்று மகளுக்கு பார்த்து பார்த்து நடிகரை தேர்வு செய்கிறாரே இந்த அப்பா என்று கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். இவ்வாறுஇருக்கையில் தான் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு மகளுக்கு கிடைத்தது. அந்த ஆளு வேண்டவே வேண்டாம் என அப்பா அடம்பிடிக்க, அவருடன் தான் நடிப்பேன் என மகளும் அடம்பிடித்து கமிட்டாகிவிட்டார்.
அத்தோடு சர்ச்சை நடிகருடன் சேர்ந்து நடித்தால் நாமும் சர்ச்சையில் சிக்கி பிரபலமாகிவிடலாம். நல்ல விதமாக செல்வதை விட சர்ச்சைகள் தான் சீக்கிரம் கை கொடுக்கும் என நடிகை முடிவு செய்தார். ஆனால் சர்ச்சை நடிகரின் படத்தில் பிரச்சனை ஏற்பட்டு அவர் விலகிவிட்டார். தற்போது அந்த நடிகருக்கு பதில் நான்கு எழுத்து நடிகரை கதாநாயகன் ஆகிவிட்டார்.
புது கதாநாயகனை பார்த்த நடிகை இவருக்கு நான் ஜோடியா என நக்கலா கேட்டாராம். நீங்களே இந்த துறைக்கு புதிது தான். அதில் இந்த பில்ட்அப் தேவையா என்றதாம் படக்குழு. வம்பில் சிக்கி பெரிய ஆளாகிவிடலாம் என்று பார்த்தால் நம் கணக்கு இப்படி தப்புக் கணக்காகிவிட்டதே என நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம். இதற்கிடையே நடிகை நடித்து வரும் படத்தின் இயக்குநரோ, சார் உங்க மகளை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள் என அப்பாவிடம் புகார் தெரிவித்திருக்கிறாராம்.
Listen News!