தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் ஆவார். இவர் தற்போது நடிகராகவும் புது பரிமாணம் ஒன்றை எடுத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் ரஜனியின் அடுத்த படத்தை இயக்கும் இவர் படம் குறித்த தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
"மாநகரம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் ஆவார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்தே "கைதி,மாஸ்டர்" போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் இவருக்கு அமோக வரவேற்பை கொடுத்தது "விக்ரம் மற்றும் லியோ" ஆகிய திரைப்படங்கள் ஆகும். இந்த நிலையில் இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜனியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ராஜ்கமல் தயாரிப்பில் சுருதிகாசனின் இசையமைப்பில் தயாரான "இனிமேல்" என்ற ஆல்பம் சோங்கில் இவர் நடித்திருந்தார். இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஊடகவியலாளரால் "தலைவர் படம் நின்னுபோச்சே ஏன்" என்று கேட்ட போது "நிக்குதா எங்க நிக்குது என்று நகைச்சுவையாக கூறிவிட்டு 3 நாட்கள் மாத்திரமே இந்த பாடலுக்காக செலவிட்டேன். தலைவர் படத்திட்க்கான படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கும்" என்றும் கூறி உள்ளார்.
Listen News!