விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் புகழ். இதில் இவர் செய்த டைமிங் காமெடிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி புகழின் கெரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இதனால் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று நடித்து வருகின்றார்.அத்தோடு யோகிபாவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றார் என்பதும் முக்கியமாகும்.அதுமட்டுமின்றி இவர் ஹீரோவாகவும் மிஸ்டர் ஜூ கீப்பர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் புகழ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளாராம்.இந்நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இவர்கள் இருவரும் கடந்த ஆண்டே பதிவுத் திருமணம் செய்து விட்டார்களாம்.
கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புகழும் பென்சியாவும் கடந்த வருடமே பதிவு திருமணம் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தான் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இவர்களது காதலுக்கு முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே இவர்கள் இருவரும் கடந்த ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் குடும்பத்தினர் சம்மதித்த பிறகு தற்போது அனைவர் முன்னிலையிலும் முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
Listen News!