நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க அவர் மும்பை சென்றிருந்தார்.
இந்தப் படத்தில் ரஜினியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து மும்பையில் சில தினங்கள் அவர் சூட்டிங்கில் பங்கேற்பதாக இருந்தது.
நடிகர் ரஜினிகாந்த் -நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன் லால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், அனைத்து மொழிகளில் இருந்து முக்கியமான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தின் வீடியோ ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு மாதம் கூட இல்லாத நிலையில் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்ட் படம் ஏற்படுத்திய சொதப்பலை தற்போது ஜெயிலர் படம் மூலம் சீர்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் உள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் தற்போது இணையவுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த லால் சலாம் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கில் பங்கேற்பதற்காக அவர் மும்பை புறப்பட்டு சென்றார். இதன் விமான நிலைய வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்டானது.
தொடர்ந்து படத்தின் ரஜினிகாந்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்தப் படத்தில் அவர் முஸ்லிம் கேரக்டரில் நடிக்கவுளள நிலையில், இந்தப் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், மும்பையில் அவரது சூட்டிங் 8 நாட்கள் திட்டமிடப்பட்டன. தொடர்ந்து முதல் 3 நாட்கள் இந்த சூட்டிங் சிறப்பாக நடைபெற்ற நிலையில், 4வது நாளில் கூட நடிக்கும் நடிகர் வராததால், படத்தின் சூட்டிங் தடைப்பட்டுள்ளது.
தொடர்ந்து ரஜினிகாந்த், மும்பையிலேயே 5 நாட்கள் இருந்துள்ளார். ஆனால் சூட்டிங் நடக்காத நிலையில், அவர் புறப்பட்டு சென்னை வந்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் தற்போது டெல்லி புறப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மும்பையில் எடுக்கவேண்டிய காட்சிகளை வெந்து தணிந்தது காடு படத்திற்காக சென்னையில் போடப்பட்ட மும்பை செட்டில் வைத்து ஒப்பேற்றி எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகரை வைத்து எடுக்கப்படும லால் சலாம் படத்தின் சூட்டிங், இத்தகைய சொதப்பலை சந்தித்துள்ளது, கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலாவது இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கை படக்குழுவினர் சிறப்பாக திட்டமிட்டு நடத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பமாக உள்ளது. தன்னுடைய தந்தை என்பதால், ஐஸ்வர்யா ரஜினி, மெத்தனமாக இருந்தாரா என்ற கேள்வியையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.
Listen News!