கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும் வென்றுள்ளார்.
இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.மேலும் கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கமல் ஹாசன் இயக்கி நடித்து வெளிவருவதாக இருந்த திரைப்படம் மருதநாயகம். கிட்டத்தட்ட 35 சதவீதம் படமாக்கப்பட்ட நிலையில் சில பிரச்சனை காரணமாக மருதநாயகம் அப்படியே நின்றுபோனது.
மேலும் சில மாதங்களுக்கு முன் கூட கமல் ஹாசன் அளித்திருந்த பேட்டி ஒன்றில் விரைவில் மருதநாயகம் துவங்கும் என்று கூறியிருந்தார்.இந்நிலையில், தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். ஆனால், கமல் ஹாசன் இப்படத்தில் நடிக்கமாட்டார் என தெரிகிறது.
படத்தை இயக்கும் பொறுப்பை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கமல் ஹாசன், இப்படத்திற்கு சூர்யா அல்லது விக்ரமை ஹீரோவாக போட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Listen News!