தடம், தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அடுத்தாக உருவாகவுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார்.
இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த மே மாதமே ரிலீஸ் ஆன போதும் இன்னும் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் உள்ளது.தொடர்ந்து ஷூட்டிங் தள்ளிப்போட்டு வந்த படக்குழு தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி மூன்றே மாதங்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் மகிழ் திருமேனி.ஏனெனில் வருகிற நவம்பர் மாதம் நடிகர் அஜித் தன்னுடைய இரண்டாம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்க இருப்பதால் அதற்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட பிளான் செய்துள்ளனர்.
இதையடுத்து படத்தின் பின்னணி பணிகளை முடித்து படத்தை வருகிற 2024-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர பிளான் போட்டுள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் கண்டிப்பாக இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.
Listen News!