• Sep 20 2024

அப்பாவையும் காதலியையும் அந்தக் கோலத்தில் பார்த்த மகன்.. அடுத்த நொடியே மரணம்.. 'Obsession' வெப்சீரிஸ் முழு விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகி உள்ள 'Obsession' வெப்சீரிஸ் எரோடிக்கா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது த்ரில்லர் வெப்சீரிஸ்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கும் இந்த வெப்சீரிஸ் போதுமான ட்விஸ்ட்களை கொடுத்துள்ளது. 

அந்தவகையில் முதல் சீனிலேயே பிரபல நியூரோ சர்ஜனான டாக்டர் வில்லியம் ஃபாரோ (ரிச்சர்ட் ஆர்மிடேஜ்) ரொம்பவே சிக்கலான ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பிரித்து எடுக்கும் காட்சி மிகவும் அழகாக காட்டப்படுகிறது. பின்பு இது மருத்துவத் துறை பற்றிய வெப்சீரிஸா என நினைத்து பார்க்கும் ரசிகர்களுக்கு அடுத்த நொடியே இது எரோடிக்கா வெப்சீரிஸ் என்பது தெரிந்து விடுகின்றது.


கதைக்களம் 

இந்நிலையில் இந்த வெப்சீரிஸினுடைய கதைக்களத்தை நோக்குவோம். அந்தவகையில் ஜே (ரிஷ் ஷா) எனும் இளைஞனை அனா பார்டன் (சார்லி மர்பி) காதலித்து வருகிறார். அதாவது மருத்துவர் வில்லியம் ஃபாரோவின் மகன் தான் ஜே. வில்லியம் ஃபாரோ செய்த சாதனையை பாராட்டி சரக்கு பார்ட்டி ஒன்று நடக்கிறது. 

அவ்வாறான ஒரு பார்ட்டியில் தான் அனாவை வில்லியம் சந்திக்கிறார். வில்லியமின் அபார ஆற்றல் பற்றி அறிந்த அனா அவரை உணர்வு பூர்வமாக பாராட்டுகிறார். இளம் பெண் ஒருவர் தன்னை பாராட்டுவதை பார்த்து பூரித்துப் போக அவர் மீது காதல் என்று கூட சொல்ல முடியாது உடனே காமம் கொள்கிறார் மருத்துவர் வில்லியம். இதனையடுத்து இருவரும் உடனடியாக தனியாக சென்று ஒரு அறையில் உடலுறவு கொள்கின்றனர். 

அதன் பின்னர் தனது காதலனுடன் அனா வில்லியம் வீட்டுக்கு வர இருவருமே ஷாக் ஆகின்றனர். வில்லியமின் மனைவி இங்கிரிட் (இந்திரா வர்மா) பழைய காமசூத்ரா படத்தில் நடித்த அதே இந்திரா வர்மா தான். இதில் இவர் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கிறார். மகனின் காதலி என அறிமுகமாகும் அந்த பெண்ணை பார்த்த நொடியிலே இவ ரொம்ப பெரிய பொண்ணா இருக்காளே மகனை விட அதிக வயதாக இருக்கிறது. இது செட்டாகுமா? என கணவனிடம் கேள்விகளை கேட்க, அதெல்லாம் இப்போ ஒரு பிரச்சனையே இல்லை என மகனின் காதலுக்கு அப்பா வில்லியம் பச்சைக் கொடி காட்டுகிறார்.

அப்பாவுடனும் மகனுடனும் உறவு

முக்கியமான ஒரு மோசமான விடயம் என்னவெனில் காதலன் ஜேவை காதலித்துக் கொண்டே அவனது அப்பா வில்லியம் உடன் ரகசியமாக கள்ள உறவில் ஈடுபட்டு வருகிறார் அனா. மகனின் காதலி என்று தெரிந்தாலும், அனா மீது கொண்ட மோகத்தால் அவளை பிரிய மனம் இன்றி அவள் சொல்வதை எல்லாம் உடனே செய்து வருகிறார் வில்லியம்.

இவ்வாறாக இவர்கள் இருவருக்கு இடையே ரகசிய உறவு ஒரு பக்கம் படு ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அம்மா இன்கிரிடுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தனது கணவர் மீது சந்தேகம் கிளம்பி வருகிறது. அதாவது தனது படுக்கையில் இருந்து பாதி ராத்திரியில் காணாமல் போகிறாளே அனா என காதலனுக்கும் அதே டவுட்டு கிளம்புகிறது.

அந்த கோலத்தில் அப்பாவும் காதலியும்

இதனைத் தொடர்ந்து பார் ஒன்றில் அப்பாவிடம் தனது காதலி பற்றி குழப்பமாக பேசிக் கொண்டிருக்க, அவனது காதலி சொன்ன அதே தத்துவ வார்த்தைகளை அப்பா வில்லியமும் எதேச்சையாக அவனுக்கு சொல்ல, இது உங்களுக்கு எப்படி தெரியும் என உடனே ஜே கேட்கிறான். இது கவிதை எல்லாருக்குமே தெரியும் என மழுப்பி விட்டு அங்கிருந்து சென்று மகனின் காதலியுடன் உல்லாசமாக இருக்க வில்லியம் செல்கின்றார்.

பின்னர் தனது காதலியின் அறைக்கு சென்று பார்க்கும் போது அப்பாவும் தனது காதலியும் அந்த கோலத்தில் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறான் ஜே. 

அடுத்த நொடியே மரணம்

இப்படி ஒரு கோலத்தில் மகன் பார்த்து விட்டானே என பயந்து கொண்டு எந்திரிச்சு ஆடையை மாட்டலாம் என வில்லியம் நினைக்கின்றார். ஆனால் அடுத்த நொடியே பயத்தில் பின்னாடி நகரும் ஜே மாடியில் இருந்து கீழே விழுந்து அந்த ஸ்பாட்டிலேயே மண்டை உடைந்து மரணிக்கிறான். 

இதனையடுத்து டிரெஸ் கூட போடாமல் அத்தனை படிகளிலும் கடகடவென இறங்கி தனது மகனை மடியில் ஏந்தி தான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்து வருந்தி அழுகிறார் வில்லியம். அதன் பின்னர் என்ன ஆனது என்கிற ட்விஸ்ட் உடன் செல்கிறது இந்த அப்செஸன் வெப்சீரிஸ்.


பலம் 

இந்த வெப் சீரிஸினுடைய பலம் என்னவெனில் நடிகர்கள் தேர்வு, பக்கா கெமிஸ்ட்ரி, எரோடிகா ரசிகர்களை திருப்திப்படுத்தும் நிர்வாண காட்சிகள் மற்றும் உடலுறவு காட்சிகள் அதிகம் இடம்பெற்று இருக்கிறது. 

அத்தோடு வெப்சீரிஸின் மேக்கிங், இசை உள்ளிட்டவை இதற்குப் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேபோல் அந்த பெண்ணுக்கும் இவருக்கும் இடையே என்ன சம்பந்தம் என வரும் பிளாஷ்பேக் போர்ஷனும், இறுதியில் என்ன ஆனது என்கிற கிளைமேக்ஸும் நன்றாக உள்ளது. 

அதேபோன்று வெறும் 4 எபிசோடுக்குள் பரபரவென கதையை சொல்லி முடித்ததே சிறப்பு. 

பலவீனம் 

பலவீனம் என்னவெனில் கதையை பெரிதாக நம்பாமல் சதையை நம்பியே எடுக்கப்பட்ட நெட்பிளிக்ஸின் இன்னுமொரு கில்மா வெப்சீரிஸாகவே இது கடந்து செல்கிறது.

மேலும் இதுவரை ஏகப்பட்ட ஆபாச வெப்சீரிஸ்கள் நெட்பிளிக்ஸில் இடம்பெற்று இருந்தாலும், பல வெப்சீரிஸ்களில் ஆழமான அழுத்தமான கதைகள் அடங்கி இருக்கும். ஆனால், இந்த வெப்சீரிஸில் அது பெரிதாக இல்லை என்று கூறலாம்.

அதுமட்டுமல்லாது இந்திரா வர்மாவின் நடிப்பு இதில் மொத்தமாக வீணடிக்கப்பட்டு விட்டது.

Advertisement

Advertisement