தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் தற்பொழுது கமலின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதில் ராம்சரணுடன் முதன் முறையாக இணைந்துள்ளதால் கேம் சேஞ்சர் படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகின்றார்.
ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும், வில்லனாக எஸ்ஜே சூர்யாவும் நடித்து வருகின்றனர். மேலும், அஞ்சலி உட்பட பலரும் கேம் சேஞ்சர் படத்தில் கமிட்டாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி முழுவதும் லீக்காகி வைரலாகியுள்ளது. வழக்கமாக ஷங்கர் படங்களுக்கு ஏஆர் ரஹ்மான் தான் இசையமைப்பார். ஆனால், இந்தப் படத்துக்கு தமனுடன் கூட்டணி வைத்துள்ளார் ஷங்கர். இப்போது அதுவே அவருக்கு வினையாகிவிட்டது. தமன் இசையில் கேம் சேஞ்சர் படத்துக்காக உருவான ஒரு பாடல் இணையத்தில் லீக்காகியுள்ளது.
ராம் சரணும் கியாரா அத்வானியும் ஆயிரக்கணக்கான குரூப் டான்ஸர்ஸுடன் நடனமாடும் இந்தப் பாடல், 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாம். கலர்ஃபுல்லாக உருவாகியுள்ள இந்தப் பாடல் தான் இப்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. இதனால் ஷங்கர் உட்பட மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!