உலகநாயகன் நாயகன் கமலஹாசன் அவர்களின்69வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று கமல்- மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான டைட்டில் டீசர் உடன் வெளியானது. அந்த டைட்டில் வைக்கபட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம் வாங்க.
கிட்டத்தட்ட 36 வருடத்திற்கு பிறகு கமல்- மணிரத்தினம் கூட்டணி மறுபடியும் ‘தக் லைஃப்’ படத்தில் இணைத்துள்ளது.இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவில் கமல் ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ என்ற பெயரோடு அறிமுகப்படுத்தி காயல்பட்டினத்துக்காரர் என்று ஊர் பெயரையும் சேர்த்து சொல்லி இருப்பார்.
காயல்பட்டினத்துக்காரர் என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்தினார் என்றால், அதன் ஊரில் நிஜமாகவே அப்படி ஒரு கேரக்டரில் யாராவது வாழ்ந்திருக்கிறார்களா? அவர்களைப் பற்றிய கதைதான் இந்த படமா? என்று பல கேள்விகள் எழுகிறது.
காயல்பட்டினத்திற்கு பின்னாடி இவ்வளவு கதைகள் இருக்கிறதா என ஆச்சரியப்படுத்தும் வகையில் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏனென்றால் காயல்பட்டினம் ஒரு அழகான ஆரோக்கியமான ஊர். ஒரு காலத்தில் தூத்துக்குடி அருகே இருக்கும் காயல்பட்டினம் தான் கப்பல் போக்குவரத்து மிகுந்த மிகப்பெரிய வணிக தளமாக இருந்தது.
இங்கு தான் வணிக பொருட்களின் ஏற்றுவது, இறக்குமதி மிகுதியாக நடக்கும். இந்த ஊரில் காவல் நிலையவே கிடையாது. அது மட்டுமல்ல டாஸ்மார்க் கடை ஒன்று கூட இருக்காது. இங்கு அன்பு காட்டி எந்த ஒரு பேதமும் இல்லாமல் மக்கள் வாழ்கின்றனர். பிறர் மீது அக்கறை கொண்டவர்களாக காயல்பட்டினத்து மக்கள் இருப்பார்கள்.
இன்னும் அந்த ஊர் ஒழுக்கமான ஒரு ஊராக இருந்து வருகிறது. அதனால் தான் இந்த படத்தில் கமலின் கேரக்டரான ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ காயல்பட்டிடகாரர் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். அதனால் படத்தின் கதையும் இந்த ஊரின் பின்புலத்தில் தான் இருக்கும்.
தக் லைஃப் படத்தில் டைட்டில் மற்றும் அந்த படத்தின் கதை தூத்துக்குடி அருகே இருக்கும் காயல்பட்டினத்தில் இருக்கும் மக்களை பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த படத்தின் டீசரை பார்க்கும் போதே கேங்ஸ்டர் படமாக இருக்கிறது. அப்படிப்பட்ட படத்திற்கு தக் லைஃப் என எதற்கு டைட்டில் வைத்தனர் என்றும் குழப்பமாகவே உள்ளது.
Listen News!