• Nov 19 2024

12பேரினால் நிராகரிக்கப்பட்ட கதை... 13ஆவது ஆளாக ஓகே சொன்ன சூர்யா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைத் தன்னுடைய நடிப்பினால் கட்டிப் போட்ட ஒருவரே நடிகர் சூர்யா. இவர் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் திரையுலகில் தனக்கான பேரினையும், புகழினையும் சம்பாதித்தது தன்னுடைய தனித் திறமையினாலும் கடின உழைப்பினாலும் மட்டுமே தான். 


இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். அத்தோடு தமிழக விருதுகள், தேசிய திரைப்பட விருது, தென்னிந்திய பிலிம்பேர் எனப் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். 

மேலும் 1997 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் தற்போது 25 ஆண்டுகளை கடந்து விட்ட போதும் இன்றும் அதே கட்டான உடலமைப்போடு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.


இவர் நடிப்பில் உருவான படங்களில் 'பிதாமகன், பேரழகன், வேல், ஆதவன்,ஏழாம் அறிவு, சிங்கம்' போன்ற பல படங்களை இன்றும் நம்மால் மறக்க முடியாது. 

அப்படியான படங்களில் ஒன்று தான் 'கஜினி'. இப்படமானது சூர்யா நடிப்பிலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.


முற்றிலும் மாறுப்பட்ட கதைகளத்தில் உருவான  இப்படமானது மக்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

மேலும் தமிழகத்தில் வசூல் சாதனை படைத்த கஜினி திரைப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்திருந்தார் இப்படத்தின் உடைய இயக்குநர் முருகதாஸ். 

அதுமட்டுமல்லாது அப்படம் தான் இந்தியா அளவில் முதன்முதலாக ரூ. 100 கோடி வசூலினை வாரிக் குவித்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது.


அத்தகைய கஜினி திரைப்படம் பற்றி தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது கஜினி திரைப்படத்தின் கதையை இயக்குநர் முருகதாஸ் முதலில் 12 ஹீரோக்களிடம் கூறி இருந்தாராம்.

அதன்பிறகு தான் 13 ஆவது ஹீரோவாக இப்படத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் சொல்லி இருக்கின்றார். இப்படத்தினுடைய கதையானது சூர்யாவிற்கு ரொம்ப பிடித்துப் போனதால் அவர் ஓகே சொல்லி இருந்தாராம்.


இவ்வாறாக பன்னிரண்டு பேரினால் நிராகரிக்கப்பட்ட படமானது எந்த ஒரு தடையுமின்றி வெளியாகி ஹிட் ஆகி இருக்கு என்று சொன்னால் அது பாராட்டக் கூடிய விடயம் தான்.

Advertisement

Advertisement