• Nov 11 2024

29 தயாரிப்பாளர்கள் நிராகரித்த கதை.. உருக்கமாக பேசிய எஸ்.ஏ.சி-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 80களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநகராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையுமான இவர் சமீப காலமாக 'யார் இந்த எஸ்.ஏ.சி'.என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

மேலும்  இதில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தனது முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் வெளிவர தான் பட்ட கஷ்டத்தை மனம் திறந்து  தெரிவித்துள்ளார்.

யார் இந்த எஸ்.ஏ.சி நிகழ்ச்சியின் 22 எபிசோடில், ஒருவருடைய வாழ்க்கை எல்லாக் காலத்துளையும் இருட்டா இருப்பது இல்லை, அவருடைய இலக்கை என்ன என்று முடிவு செய்து விட்டு, அந்த இலக்கை நோக்கி உழைத்து உழைத்து முன்னுக்கு வரும் போது வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும்.

மேலும்  எத்தனை முறை தோற்றாலும், விழுந்தாலும் மறுபடியும் மறுபடியும் எழுந்து ஒடவேண்டும், கடுமையான உழைப்பு, விடா முயற்சியும் தான் வெற்றியைத் தரும் இதை ஏன் நான் இப்போது சொல்கிறேன் என்றால், என் வாழ்க்கையில், பசி, பட்டினி, கஷ்டம் எல்லாத்தையும் பார்த்து இருக்கிறேன் ஆனால், நான் பயந்து ஓடிப்போகவில்லை என்றார்.

என் முதல் படம் சட்டம் ஒரு இருட்டறை அந்த கதையை நான் 29 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன்.  கதையை கேட்ட அனைவருமே இது என்ன கதையா என்று என்னை மோசமாக விமர்சனம் செய்தனர். ஆனால், தொடர்ந்து சோர்ந்து போகாமல் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அப்போதுதான்,வடலூர் சிதம்பரத்திடம் இந்த கதைசொன்னேன் அவர் இந்த படத்தை தயாரிப்பதற்கு சம்மதித்தார்.

அப்போது, இந்த படத்திற்கு சம்பளமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கேட்டேன்.அத்தோடு அப் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றநிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து படத்தை இயக்கினேன். இந்த படத்தை பார்த்த அபிதாப் பச்சன் இந்த படத்தை என்னை இயக்கும்படி கூறினார். 29 பேரால் நிராகரிக்கப்பட்ட ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றார்.

Advertisement

Advertisement