1977ல் 'காத்திருன்ன நிமிஷம்' என்ற படத்தின் ஷூட்டிங்காக எர்ணாகுளம் சென்றுள்ளார் கமல்ஹாசன். அந்நேரத்தில் தான் கமல் வாணிகணபதியோடு காதல் வயப்பட்டு திருமணம் குறித்த பேச்சும் நடந்துள்ளது.
அப்போது பள்ளி மாணவி ஒருவர் ஷூட்டிங்கில் இருந்த கமல்ஹாசனை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். அப்போது அவரை அழைத்த கமல்ஹாசன், "சினிமாவில் நடிக்க விருப்பமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் இல்லை என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இதனைக் கேட்ட கமல் "படிப்பெல்லொம் முடித்து சினிமாவில் நடிக்க விரும்பினால் சென்னையில் வந்து என்னைப்பார். சினிமாவில் நடிப்பதற்கான முகம் உனக்கு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
அதன்பின்னர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்த அந்த மாணவி, அடுத்த வருடமே நாயகியாக கமிட்டானார். பின்னர் கடல் மீன்கள் படத்தில் அம்பிகா நடிக்க வந்ததும் கமல் முதலில் சிபாரிசு செய்தது ஸ்ரீதரின் சக்தி 79 என்ற மும்மொழி படத்துக்கு தானாம். அதேபோல் வாழ்வே மாயம் படத்திற்கும் கமல் தான் சிபாரிசு செய்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், 'சகலகலா வல்லவன்' படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்துள்ளது.
தொடர்ந்து காக்கிச் சட்டை, காதல் பரிசு, விக்ரம், உயர்ந்த உள்ளம் என கமல் - அம்பிகா கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரித்துள்ளது. அதன்பின்னர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தாராம் அம்பிகா.
Listen News!