• Sep 21 2024

நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியம் கொண்டு கழுவிய மாணவர்கள்- கண்டனம் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பெங்களூரில் பிறந்தவரான பிரகாஷ்ராஜ் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். நாடகப் பின்னணியிலிருந்து சினிமாவுக்கு வந்து நீங்காத் தடம் பதித்தவர்களின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார்.இதன்காரணமாகவே பாஜகவினருக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையே டுவிட்டரில் அடிக்கடி மோதல் eடந்து வருவதும் உண்டு.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் சிவ்மோகாவில் உள்ள தனியார் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. சினிமா சமுதாயம் என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் பிரகாஷ் ராஜ் வருகையை எதிர்த்து கல்லூரி வளாகத்திற்கு வெளியே போராடினார்கள்.


இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  போராட்டக்காரர்கள் யாரும் கல்லூரிக்குள் நுழைந்துவிடாமல் தடுத்தார்கள். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த கல்லூரியை விட்டு கிளம்பிய பின்னர், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்குள் வந்த பாஜக மாணவர் அமைப்பினர், அந்த அரங்கம் முழுவதையும் பசு மாட்டும் கோமியத்தை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர்.


கல்லூரி மாணவர்கள் செய்துள்ள இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தவாறு உள்ளன.அத்தோடு பிரகாஜ் ராஜிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement