• Nov 17 2024

ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்- அடடே இப்படியொரு சென்டிமெண்ட் காரணம் இருக்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மோகன் லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் ஆகியோரும் நடிப்பதாக வந்த அறிவிப்பால் ரசிகர்களுக்கு ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. 

இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடிப்பதால் ஜெயிலர் திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது.சமீபகாலமாக ரஜினியின் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் அந்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. 


எனவே தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கின்றார் ரஜினி. அதற்கு ஏற்றாற்போல படமும் சிறப்பாக வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை போட்டு பார்த்த ரஜினி செம திருப்தியில் இருக்கிறாராம். மேலும் இப்படம் தனக்கு எதிர்பார்த்த வெற்றியை தேடி தரும் என்ற நம்பிக்கையிலும் ரஜினி இருக்கின்றார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் லைவ் லொகேஷனிலேயே படமாக்கப்பட்டது. தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் போர்ஷன்ஸ் நிறைவடைந்ததை அடுத்து இன்னும் சில தினங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக பேசப்பட்டு வந்த நிலையில் இதையடுத்து ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என செய்திகள் வந்தன. 


ஆனால் தற்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனதாக தகவல்கள் வருகின்றன. செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஜெயிலர் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு ரஜினியின் செண்டிமெண்ட் தான் காரணமா என சிலர் பேசி வருகின்றனர். அதாவது ரஜினியின் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் வெளியானது. 


ஆனால் அப்படம் வெற்றிபெறவில்லை.எனவே தான் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யாமல் செப்டம்பர் மாதம் வெளியிட ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இதைப்பற்றி அதிகாரபூர்வமாக எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement