• Sep 21 2024

இன்று அறுவைச் சிகிச்சை நடந்து விட்டது பயனுள்ளதாக மாற்றுவேன்- நடிகர் பிரித்விராஜ் போட்ட சோகமான பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் மொழி, ராவணன், கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் தான் பிரித்விராஜ்.மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் இவரது நடிப்பில் வெளியாகியஅய்யப்பனும் கோஷியும், ஜன கண மண உள்ளிட்ட பல படங்கள் ஏகப்பட்ட இந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 

மலையாள சினிமாவைத் தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிரித்விராஜ் அதிக படங்களில் நடித்து வருகிறார். அவர் மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக பிரித்விராஜ் நடித்து வருகிறார். 

இந்த ஆண்டு இறுதியில் அந்த படம் வெளியாக உள்ளது.மேலும், அடுத்ததாக விலாயத் புத்தா எனும் மலையாள படத்தில் பிரித்விராஜ் நடித்து வந்த நிலையில், ஏற்பட்ட விபத்தில் அவரது காலில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது.


Key Hole சர்ஜரியை மருத்துவர்கள் இன்று நடிகர் பிரித்விராஜுக்கு செய்துள்ளனர். அதுதொடர்பாக தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஆம்.. நீங்க கேள்விப் பட்டதை போலவே எனக்கு சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அடிபட்டது. மருத்துவர்கள் கீ ஹோல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். அதன் காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

 ஆனால், நான் இந்த ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவேன். மேலும், நிச்சயம் சீக்கிரம் முயற்சித்து மீண்டும் ஆக்‌ஷனில் களமிறங்குவேன் என பதிவிட்டுள்ளார்.நடிகர் பிரித்விராஜுக்கு இப்படி நேர்ந்து விட்டதே என நினைத்து அவரது ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து வருகின்றனர்.

 பிரித்விராஜின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் பல பிரபலங்களும், ரசிகர்களும் சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள் என்றும் உடல் நலத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement