• Sep 20 2024

சசிகுமாரின் காமன் மேன் திரைப்படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு- தலைப்பைக் கேட்டாலே குலை நடுங்குது

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சத்யசிவா இயக்கும் புதிய படம் தான் 'காமன் மேன்'.செந்தூர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விப்ரான் இசையமைக்கிறார். இப்படமானது இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்பொழுது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் படத்தின் டைட்டிலை மாற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில சர்ச்சைகள் காரணமாக இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது . 'காமன் மேன்' 'படத்தின் டைட்டில் 'நான் மிருகமாய் மாற' என மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள், ஏங்க டைட்டில் மாத்திட்டிங்க. அப்படி என்ன சர்ச்சை எழுந்தது. அதை பற்றி எதுமே சொல்லியே. என்னங்க இப்படி ஒரு டைட்டில் வச்சிருக்கீங்க. இதுக்கு காமன் மேன் டைட்டிலே நல்லாத் தான் இருந்தது. நான் மிருகமாய் மாற…டைட்டிலை கேட்டாலே பயமா இருக்குங்க.

அதுவும் போஸ்டரில் சசிக்குமார் வேற முகம் முழுவதும் ரத்தம் வடிய நிற்கிறார். அந்த போஸ்டருடன் இந்த டைட்டிலை சேர்த்து நினைத்து பார்த்தால் படம் எப்படி இருக்குமோ என நினைத்து பார்த்தாலே குலை நடுங்குகிறது என கமெண்ட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement