• Sep 20 2024

ரீ ரிலீஸான எந்தப் படமும் இதுவரை செய்யாத சாதனையை செய்த 'பாபா'... குஷியில் படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தான். இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் தோல்வியடைந்த ஒரு சில படங்களும் உண்டு.


அந்தவகையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'பாபா'. இப்படத்தின் மற்றோர் முக்கிய விடயம் என்னவெனில் ரஜினிகாந்தே இதற்கு கதை, திரைக்கதை, எழுதி தயாரித்தும் இருந்தார்.

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொரியாலா, நம்பியார், கவுண்டமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் படுதோல்வியடைந்த இப்படத்தை தற்போது மீண்டும் தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.


அந்தவகையில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர்.

அதாவது கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து உலகளவில் சாதனை படைத்தது.


இந்நிலையில், இதுவரை ரீ ரிலீஸான எந்த ஒரு திரைப்படமும் பாபா அளவிற்கு வசூல் சாதனை செய்யவில்லை என்று தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement

Advertisement