• Sep 20 2024

தி லெஜண்ட் படம் பற்றி சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் சரவணன் அருள்.இவர் ‘தி லெஜண்ட்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார்.

மேலும் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிவியல் சார்ந்து இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகின்றது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.அத்தோடு இப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளன.

எனினும் தற்போது அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்த மொசலோ மொசலு பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சரவணன் யாஷிகா மற்றும் பல நடிகைகளுக்கு மத்தியில் எனெர்ஜிடிக் ஆகி துள்ளல் நடனம் ஆடுகிறார். பாடல்கள் படத்திற்கு பெரிய பக்க பலமாக அமைந்துள்ளன.

தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. அத்தோடு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement