• Sep 20 2024

மிரட்டலாக வெளியானது பிரபுதேவாவின் 'வுல்ஃப்' திரைப்படத்தின் டீசர்... ஜெயிலரை விட சூப்பராக இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஆரம்பத்தில் நடன அமைப்பாளராக இருந்து, பின்னர் ஹீரோவாக மாறிப், அதன் பின்னர் இயக்குநராக அவதாரமெடுத்தவர் நடிகர் பிரபுதேவா. இவ்வாறாக பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற அவரது படங்கள் எதுவும் சமீபகாலமாக வெற்றிபெறவில்லை.

இதனையடுத்து அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் 60 ஆவது படமாக வுல்ஃப் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வினோ வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் பிரபுதேவாவோடு இணைந்து வசிஷ்டா என் சிம்ஹா, ராய் லட்சுமி, அஞ்சு குரியன், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் எனப் பலரும் நடிக்கின்றனர். 


தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.  பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் ஹிப்னாடிக் திரில்லர் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதைப்படி ஹீரோ, வில்லன் இருவருமே ஓநாயின் குணாதிசயத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் இப்படத்தினுடைய மையக்கதையாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தினுடைய மிரட்டலான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் படத்தை விட சூப்பராக இருப்பதாக கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement