• Sep 21 2024

இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமா? திடீரென உதயநிதி கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் "இந்தியன் 2". இதில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி சங்கர் என நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர்.

இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் புரொமோஷனில் கலந்துகொண்ட உதயநிதி இந்தியன் படத்தை பற்றிய அப்டேட் ஒன்று கூறியுள்ளார். அதில், "இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சிறிது காலம் நீடிக்க காரணம் படத்தில் சிஜி வேலைகள் நடக்கவுள்ளது. இந்த படத்திற்காக இயக்குநர் ஷங்கர் மட்டும் கமல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்..

மேலும், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் தயாரிக்க திட்டம் இருக்கிறது. இதுகுறித்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது" என தெரிவித்தார். இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை. 




Advertisement

Advertisement