• Sep 21 2024

’தல 61’ படத்தில் இணைந்த மூன்று நடிகர்கள்-யார் யார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்பொழுது தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை வலிமை திரைப்பட இயக்குநரான எச். வினோத் இயக்குவதோடு போனி பூர் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. அதற்காக போடப்பட்ட வங்கி செட்டில் H வினோத் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்த நிலையில் நீண்டகால படப்பிடிப்பான 51 நாட்கள் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன

அத்தோடு இந்த படத்தில் மூன்று நடிகர்கள் இணைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாநதி சங்கர், பகவதி பெருமாள் மற்றும் ஜிஎம் சுந்தர் ஆகிய மூவரும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் ஏகே 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement