விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 9. இந்த நிகழ்ச்சியினை மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது ப்ரியங்காவுடன் இணைந்து சிவாங்கி நடாத்தி வருகின்றார்.
அந்தவகையில் இந்த நிகழ்ச்சியில் டிவோஷனல் ரவுண்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அதாவது போட்டியில் பங்கேற்ற கோகுல் என்ற சிறுவன் ஒருவன் கானா பாடலினைப் பாடுகின்றார். அதனைக் கேட்ட இசையமைப்பாளரும், நடுவருமாகிய தமன் "எனக்கு பொதுவாக கானா என்றாலே ரொம்ப பிடிக்கும்" என்கிறார்.
அதுமட்டுமல்லாது குறித்த அந்த சிறுவனுக்கு தனது இசையில் பாடுவதற்கும் வாய்ப்பளித்துள்ளார் தமன். இது குறித்து அந்த சிறுவன் கூறுகையில், தமன் சார் தன்னை ஐதராபாத் கிளம்பி வர சொன்னதாகவும் பின்னர் தன்னை அவரது இசையில் பாட வைத்து ஆனந்தப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு குடும்பத்தினரும் ஆனந்தக் கண்ணீர் வடித்து தமனுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இதோ அந்த வீடியோ..!
Listen News!